Posts

Showing posts from March, 2024

புலவி நுணுக்கம்

அதிகாரம் 132 – புலவி நுணுக்கம் /  குறட் பாக்கள் குறள் #1311 பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. பொருள் பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன். குறள் #1312 ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து. பொருள் ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை “நீடுவாழ்க” என வாழ்த்துவேன் என்று நினைத்து. குறள் #1313 கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று. பொருள் கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள். குறள் #1314 யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. பொருள் “யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்” என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு “யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்” எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள். குறள் #1315 இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேன...